பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

ஆனால் அவைகளில் ஒன்றில் இருப்பது சிவப்பு நிறத்துக்கான ஜீன்; மற்றொன்றில் இருப்பது வெள்ளை நிறத்துக்கான ஜீன். ஆகவே, வெண்சிவப்பு அந்தி மல்லிகைகள் தமக்குள்ளே ஒரே இனச் சேர்க்கையாகும்போது என்னவாகும் என்று கவனிப்போம்.

படம் 3.

அவற்றின் உயிரணுக்களில் கருவுண்டாகக் காரணமான அணுக்கள் முதிரும்போது விந்தணுவிலும் அண்டத்திலும் வெள்ளை நிறத்துக்கான ஒரு ஜீனோ அல்லது சிவப்பு நிறத்துக்கான ஒரு ஜீனோதான்

பா—2