பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இருக்கும். ஆதலால் அவை சேர்ந்து கருவாகும்போது கீழ்க்கண்டவாறு புதிய பூச்செடிகள் தோன்றுகின்றன. முதிராத அணுவில் உள்ள நிற ஜீன்களில் ஒன்று வெள்ளைக்கானது; மற்றொன்று சிவப்புக்கானது. அவற்றை வெசி என்று குறிப்பிடலாம். அணு முதிரும் போது அதில் வெ அல்லது சி மட்டுந்தான் இருக்கும். அப்படி உண்டான விந்தணுவும் அண்டமும் கலந்து எவ்வாறு புதிய செடிகள் உண்டாகின்றன என்பதை 4-வது படத்தில் காணலாம்.

வெண்சிவப்புப் பூக்கள் இரண்டின் ஒரே இனச் சேர்க்கையால் எவ்வாறு 1:2:1 என்ற விகிதத்தில் வெள்ளை, வெண்சிவப்பு, சிவப்பு நிறப்பூக்களைத் தரும் அந்தி மல்லிகைகள் உண்டாகின்றன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. இவற்றில் வெவெ ஜீனுடைய பூச்செடிகளை அவற்றிற்குள்ளேயே சேர்த்தால் வெள்ளைப் பூவே உண்டாகும். சிசி ஜீனுடைய செடிகளைச் சேர்த்தால் சிவப்புப் பூவே உண்டாகும். வெசி வெசி ஜீனுடைய செடிகளைச் சேர்த்தால் படத்தில் கண்டவாறு மூவகைப் பூக்கள் உண்டாகும்.

 

7. ஓங்கி நிற்றல்

நிறத்துக்குக் காரணமான ஜீன்கள் ஒரே மாதிரியான தன்மையோடு இருப்பதில்லை. அந்தி மல்லிகை