பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கருநிறம் ஓங்கி நிற்பதால் எலி கறுப்பாகவே இருக்கிறது.

ஆனால் வெள்ளை நிற ஜீன் அடியோடு மறைந்தே போய் விடுவதில்லை. முதல் கலப்பினச் சேர்க்கையில் பிறந்த எலிகள் கறுப்பாக இருந்தாலும் அவற்றுக்குள்ளேயே ஓரினச் சேர்க்கை செய்தால் அதனால் பிறந்த குட்டிகளில் சுமார் நான்கில் ஒரு பாகம் வெண்மையாக

படம் 5.

இருக்கின்றன. 6-வது படத்தைப் பார்த்தால் அது சுலபமாக விளங்கும்.

முதல் கலப்பினச் சேர்க்கையால் பிறந்த காரெலிகளின் அணுக்களில் கருமை வெண்மை ஆகிய இரு நிறத்துக்கான ஜீன்களும் இருக்கும். அப்படிப்பட்ட ஆண் அணுவையும் பெண் அணுவையும் எடுத்துக்