பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வெள்ளை நிறமுள்ள ஓர் ஆணுக்கும், கறுப்பு நிறமுள்ள பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளின் நிறம் பலவிதமாக அமைகிறதே, அதற்கென்ன காரணம் கூறுவது? மனித நிறக்கோல்களில் நிறத்துக்குரிய ஜீன்கள் மேலே குறிப்பிட்டபடி ஒன்றொன்றுதான் இருக்குமென்பதில்லை; நிறத்துக்கான பல ஜீன்கள் இருக்கின்றன. ஆதலால் அவை சேரும்போது ஒவ்வொரு தடவையும் பூரித்த அண்டத்தில் ஒரே அளவில் இருக்குமென்பதில்லை. அவை எந்த விகிதத்தில் சேர்கின்றனவோ அவற்றுக்குத் தக்கபடி குழந்தையின் நிறம் அமைகிறது.

 

9. ஆணா பெண்ணா?

குழந்தை ஆணாகவோபெண்ணாகவோ பிறப்பதற்கு அதன் தாய் காரணமல்லவென்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதோடு குழத்தையின் தகப்பன் தான் அதற்குக் காரணம் என்றால் இன்னும் ஆச்சரியம் அதிகமாகும். ஆண் அணுவிலுள்ள 24 ஜோடி நிறக்கோல்களில் உருவ வேறுபாடுள்ள நிறக்கோல்கள் தான் ஆணாவதற்கும் பெண்ணாவதற்கும் காரணம். பெண் அணுவிலுள்ள 23 ஜோடி நிறக்கோல்களை உருவ ஒற்றுமைப்படி ஆண் அணுவிலுள்ள 23 ஜோடி-