பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


10. பாரம்பரியமும் சூழ்நிலையும்

இவ்வாறு உடல் உறுப்புக்களின் பாரம்பரியத் தன்மைகளை அறிந்து கொள்வது ஓரளவு சுலபம்; ஆனால் மனதைப்பற்றி அவ்வளவு சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. காக்காய் வலிப்பு, பைத்தியம் ஆகிய குறைபாடுகள் பாரம்பரியமாகவருகின்றன. சூழ்நிலையும் இவற்றுக்குக் காரணமாக இருப்பதுண்டு. சாதாரணமாகச் சில நோய்களும், தொற்று நோய்களும் எதிர்பாராது ஏற்படும் விபத்துக்களும் காக்காய் வலிப்புக்குக் காரணமாகின்றன. போதை வஸ்துக்களும் ஒழுங்கீனமான வாழ்க்கையும் எதிர்பாராத பெரிய அதிர்ச்சிகளும் சித்தப்பிரமையை உண்டாக்கலாம். பாரம்பரியமாகவும் மேற்கூறிய நோய்கள் எவ்வாறு உண்டாகின்றன என்று கவனிப்போம். தாய் தந்தை இருவரும் மனத்திடம் அற்றவர்களாக (Feeble-minded) இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மனத்திடம் இல்லாமல் இருப்பார்கள்; சில குழந்தைகளுக்குக் காக்காய் வலிப்பும் உண்டாகலாம். கோடார்டு (Goddard) என்பவர் மனத்திடமற்ற பலரின் குடும்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அவற்றில் இருந்த 470 குழந்தைகள் மனத்திடம் அற்றிருந்தன; ஆறு குழந்தைகளுக்கே அந்தக் குறைபாடில்லை. பெற்றோர்களில் ஒருவர் மனத்திடமற்றும், மற்றொருவர் அந்தக் குறைபாட்டைத் தமது நிறக்கோலில் கொண்டவராகவும் இருந்த வேறு சில