பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

குடும்பங்களில் 193 குழந்தைகள் மனத்திடமற்றும், 144 குழந்தைகள் குறைபாடில்லாமலும் இருந்தனர். இந்தக் குறைபாட்டைக் கொண்ட தாய் தந்தையர்களடங்கிய 26 குடும்பங்களில் 39 குழந்தைகள் குறைபாடில்லாமலும் இருந்தனர்.

மனத்திடமற்ற தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளில் சில காக்காய் வலிப்புடையவைகளாக இருக்கலாம் என்று முன்பு கூறினேன். இம்மாதிரி உண்டாவதை விடப் பெற்றோர்களில் ஒருவர் இந்த நோயை உடையவராகவும் மற்றொருவர் மனத்திடமற்றவராகவும் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில்தான் அதிகமானவர்கள் இந்த நோயை உடையவர்களாக இருப்பார்கள். பைத்தியமும் இவ்வாறே பெரும்பாலும் உண்டாகிறது. நல்ல திறமைகள் அமைவதிலும் பாரம்பரியத்தின் பங்கை நிர்ணயிப்பதில் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. பொதுவாகப் பாரம்பரியத்தினால் திறமைகள் அமையுமென்று கூறலாமே ஒழிய அதுவேதான் காரணமாக இருக்க முடியும் என்று வாதிக்க இயலாது. மிகுந்த திறமைசாலிகள் தோன்றிய சில குடும்பங்களின் வம்சாவளியை எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அப்படிப்பட்ட திறமைகள் அமைவதில் பாரம்பரியம் காரணமாக இருப்பது தெரிகிறது.

கால்ட்டன் (Galtan) என்பவர் 977 பிரமுகர்களையும் 977 சாதாரண மனிதர்களையும் எடுத்துக்கொண்டு