பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அவர்களுடைய சுற்றத்தார்களைப் பற்றி ஆராய்ந்தார். பிரமுகர்களின் சுற்றத்தார்களில் 533 பேர் சமூகத்தில் முக்கிய ஸ்தானம் வகித்து வந்தார்கள்; ஆனால் மற்ற சாதாரண மனிதர்களில் 4 சுற்றத்தார்களே முக்கிய ஸ்தானம் வகிப்பவர்களாகத் தெரிந்தது. இதிலிருந்து பாரம்பரியத்தின் பங்கு இன்னதென்று ஓரளவு தெரிந்துகொள்ளலாம். ஆனால் திறமைசாலிகள் தோன்றும் குடும்பங்களிலும் சாதாரண மக்கள் தோன்ற முடியும்; சாதாரணக் குடும்பங்களிலிருந்தும் திறமைசாலிகள் தோன்றமுடியும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் வெல்மன் (Dr. Welman) என்ற பெண்மணி தம் ஆராய்ச்சியிலிருந்து சூழ்நிலையைச் சரிப்படுத்துவதன் மூலம் அறிவுத் திறமைகளை ஓங்கச் செய்யலாம் என்று கூறுகிறார். ஆனால் அவர் கூறுவது முற்றும் சரியானதல்ல என்று வேறுபல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், இருந்தாலும் அவர் செய்த சோதனைகளிலிருந்து சூழ்நிலையும் முக்கியமானது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டார்ச் (Starch) என்பவர் கூறிய வாசகம் இந்த இடத்தில் மிகப் பொருத்தமுடையது. ஆஸ்திரேலிய அநாகரிகர்களான வேடர்களின் இடையே நியூட்டன் பிறந்திருந்தால் அவன் ஒரு நல்ல வேடனாக, அதாவது வேட்டையாடுவதில் கெட்டிக்காரனாகத்தான் இருந்திருப்பான்; உலகம் புகழும் விஞ்ஞானியாக இருந்-