பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

 சாஸ்திரியாவான் என்று நிச்சயம் கூற முடியாது. அதற்குச் சூழ்நிலையின் உதவி தேவை. ஏற்ற பயிற்சி கிடைக்காவிடில் அந்தத் திறமை வெளிப்படாது போய்விடும்.

ஆகவே, ‘பாரம்பரியம் முக்கியமா? சூழ்நிலை முக்கியமா?’ என்ற கேள்விக்கு இதுதான் முக்கியம் என்று ஏதாவதொன்றைச் சொல்லுவது சரியாகாது. இரண்டும் முக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மீன் நீந்துவதற்கு அதன் வால் முக்கியமா அல்லது தண்ணிர் முக்கியமா என்றால் எதை முக்கியமென்று சொல்லுவது? இரண்டில் எது இல்லாவிட்டாலும் மீன் நீந்த இயலாது. இவை போலவே பாரம்பரியமும் சூழ்நிலையும்,


11. ஜீன் மாறுபாடு

ஒரு குடியானவன் சமையலறைக்குப் பின் புறத்திலே ஒரு பீச் (Peach) கன்று தற்செயலாக முளைத்திருப்பதைப் பார்த்தான். அவனுக்கு அதன்மேல் பிரியம் வந்துவிட்டது. ஜாக்கிரதையாக அதை வளர்க்க ஆரம்பித்தான். அது வளர்ந்து பூத்துக் காய்த்துப் பழுத்தது. என்ன அதிசயம்! அந்தப் பழம் அதே இனத்தைச் சேர்ந்த மற்ற மரங்களின் பழங்களைப் போலல்லாமல் ஆழ்ந்த நிறமும், அதிக ருசியும் கொண்டிருந்தது.