பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


உடலமைப்பில் மாறுபட்ட புதிய ஈக்கள் தோன்றியதைக் கண்டிருக்கிறார்கள். சிவப்பான கண்களுக்குப் பதிலாக வெள்ளை நிறமுள்ள கண்களுடைய ஈக்கள் பிறந்திருக்கின்றன; இறகே இல்லாத ஈக்கள் தோன்றுகின்றன. இவ்வாறு தோன்றுவதற்கு ஜீன் மாறுபாடே காரணமாகும்.


12. பரிணாமம்

ஜீன் மாறுபாட்டால் புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. அதுவே உலகத்தில் சிறிய உயிரிலிருந்து பலவகையான உயிரினங்கள் தோன்றி மனிதன் வரை வந்த பரிணாமத்திற்குக் (Evolution) காரணமாக இருக்கின்றது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரையில் இப்படித்தான் ஏற்பட்டனவாம்.

பரிணாமத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் மிகவும் சுவையுடையது. ஆனால் இங்கே பாரம்பரியத்தையும் சூழ்நிலையையும் பற்றியே முக்கியமாக நாம் ஆராய்ந்தோம். பாரம்பரியத்தால் கிடைத்த திறமைகளும் சூழ்நிலையின் உதவியாலேயே நன்கு மலர்கின்றது என்றும் ஆதலால் இரண்டும் முக்கியமானவை என்றும் தெரிந்து கொண்டோம்.