பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெற்றோர் கொடுத்த பெருங்கொடை

1. வித்வான் மகன் வித்வானா?

குழந்தையின் பிறப்பே ஒரு விந்தை. ஆண் பெண் சேர்க்கையில் ஏற்படும் அந்தப் புதிய உயிரைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியமான பல உண்மைகள் தெரியவருகின்றன.

தாய் தந்தையரைப் போல உருவத் தோற்றம் அமைந்த குழந்தைகளைக் காண்கிறோம். இந்த உருவ ஒற்றுமை எப்படி ஏற்படுகிறது? இதைப் போலவே தன்மைகளிலும் திறமைகளிலும் ஒற்றுமை இருக்குமா? ஒருவர் சிறந்த சங்கீத வித்வானாக இருந்தால் அவர் மகனும் சிறந்த சங்கீத வித்வானாக இருப்பானா?

இந்தக் கேள்விக்கு விடையறிய வேண்டுமானால் பாரம்பரியத்தைப்பற்றிய உண்மைகளை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பாரம்பரியம் (Heredity) என்பது பெற்றோர்களின் மூலம் பிறவியிலேயே அமையும் உடல், மனத் தன்மைகளைக் குறிக்கும். பிறப்பால் அமைந்தவை தவிர மற்ற எல்லாவற்றையும் சூழ்நிலை (Environment) என்ற பொதுப் பெயராலே குறிப்பிடுகிறோம். உணவு, வளர்க்கும் முறை, கல்வி,