பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

யிலே ஓரளவிற்குத் திறமையை அடையலாமாயினும், பாரம்பரியமே பெருமையின் எல்லையை வகுக்கிறது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் சூழ்நிலையும் பயிற்சியும் உதவி புரியாவிடில் பாரம்பரியத்தால் அமைந்த எந்தத் திறமையும் அதன் முழு அளவுக்கு மலராது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

பாரம்பரியம், சூழ்நிலை ஆகியவற்றின் இயல்புகளை விரிவாகச் சோதனை செய்து காண்பதற்காக ராக்பெல்லர் ஸ்தாபனம் நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜாக்ஸன் ஞாபகார்த்த ஆராய்ச்சிச் சாலையிலே ஏராளமான பொருட்செலவில் இதுபற்றிய சோதனை நடந்து வருகிறது. மனித வர்க்கம் விரைவிலே பெருகுவதில்லை ஆதலாலும், மக்களைச் சோதனைக்குட்படுத்துவது எளிதல்ல ஆதலாலும் நாய் முதலிய பிராணிகளைக் கொண்டே ஆராய்ச்சி நடைபெறுகிறது. அந்த ஆராய்ச்சிச் சாலையின் அதிபரான டாக்டர் லிட்டில் என்பவர், “பாரம்பரியமோ, சூழ்நிலையோ மற்றதன் உதவியின்றித் தனித்து நின்று சிறந்த பயனை அளிக்காது. ஒவ்வொன்றும் மற்றதைச் சார்ந்தே நிற்கிறது. அவை இரண்டின் கலப்பில் விளைந்ததே நாம் காணும் மனித வாழ்க்கையாகும்” என்று கூறுகிறார்.

பொதுவாகக் கூறினால் பாரம்பரியமாக உடல் உறுப்புக்களும் நிறமும் தலைமுடியின் தன்மையும்