கலைஞர் மு. கருணா நிதி 55 ஒருவர், ஒரு முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருப் பவர், முக்கியமானவர்கள் நிரம்பிய ஒரு அவையில் பேசி னார். தமிழகத்தில் வெள்ளம் புயல் ஏற்பட்டு பல பகுதிகள் சேதமுற்றது பற்றி விவாதம் நடந்தது. அந்த முக்கிய மானவர் பேசும்போது சொன்னார், "என்னுடைய சிறு வயதில் சென்னையில் பெரு வெள்ளத்தை நேரில் பார்த் தேன் " என்று. அத்துடன் நிறுத்தவில்லை. "எனக்கு ஏழெட்டு வயதிருக்கும். அப்போதுதான் சென்னையில் எம்டன் குண்டு விழுந்த நேரம். பெரிய மழை பெய்து ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொணடு சென்னை நகரமே மூழ்கிவிடும் போலிருந்தது" என்று விவரித்தார். ஒரு பெரியவர் குறுக்கிட்டு, "எம்டன் குண்டு விழுந்தது 1914-ஆம் ஆண்டில் அல்லவா?" என்றார்! "உங்களுக்குத் தெரியாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஏழு வயதுச் சிறுவன்" என்றார் திட்டவட்டமாக அந்த முக்கியமானவர்! . க . பெரும் பதவியில் இருப்பவராயிற்றே; அதனால் குறுக் கிட்ட பெரியவர் அடங்கிவிட்டார். உண்மை என்ன தெரியுமா? எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர்! ஜெர்மானியக் கப்பல்! முதல் உலக யுத்தத்தின்போது 1914-ல் சென்னையில் அந்தக் கப்பலில் இருந்து குண்டு வீசப்பட்டது. அந்த நிகழ்ச்சியைக் கல் வெட்டில் குறித்து இன்னமும் சென்னை உயர்நீதிமன்றச் சுற்றடைப்புக்குள் வைத்திருக்கிறார்கள். அந்தக் குண்டு விழுந்தபோது தனக்கு ஏழுவயது என்று கூறியவர்; பிறந்த ஆண்டு 1917 ஆகும்! பதவியிலிருப்பவர் உளறியதாயிற்றே! என்ன செய்ய முடியும் - எப்படியோ தந்திரமாக அந்தப் பேச்சை சபைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு செய்து விட்டார்கள். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மருத்துவக் கல்லூரி "மாணவர் பேரவை”க்கு அழைப்பதாக வைத்துக்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/57
தோற்றம்