உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பேசும் கலை வளர்ப்போம் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அண்ணன் ஜீவானந்தம்; எரிமலை போன்ற அரசியல் பேச்சாளர் என்பது மட்டுமல்ல -கம்பனின் கவிநயம் பற்றிச் சில மணிநேரம் சுவைபடச் சொற்பெருக் காற்றக் கூடியவராகவும் இருந்தார். கம்பராமாயணம் பற்றி எழுந்த சர்ச்சையில் பெரும் புலவர்களான நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும்- சேதுப்பிள்ளையுடனும் சொற்போர் நிகழ்த்தியபோது அறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் புலமை எப்படி ஒளிவிட்டது என்பதை நாடறியும். அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக் கிறது. ஆனால், அவர்களில் இலக்கியமுணர்ந்தோர் எண்ணிக்கை, மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. வரலாறு களையாவது ஆழமாகப் படித்திருக்கிறார்களா? அந்தத் தொகையினரும் குறைவே! பல பேச்சாளர்கள் மாற்றுக் கட்சியினரைத் தரக்குறைவாகத் திட்டிப் பேசவே மட்டும் தங்களைப் பழக்கிக் கொண்டு மேடையேறிவிடுகின்றனர். கடுமையாக - காரசாரமாகப் பேசுவது என்பது வேறு தரக்குறைவாக -- ஆபாசமாக - அருவருக்கத்தக்க முறையில் பேசுவது என்பது வேறு! கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒரு பேச்சாளருக்கு ஏற்படக் கூடும். மாற்றுக் கட்சி மேடையில் பேசிய ஒருவர் ஏதாவது அவதூறு ஒன்றைப் பரப்பிவிட்டு அதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல்; அப்படிப் பிறர் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் புழுதி' வாரித் தூற்று வதையே தனது தொழிலாகக் கொண்டிருக்கக் கூடும். அத னால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பேச்சாளர் அல்லது அந்தப் பேச்சாளர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மேடையில்