60 பேசும் கலை வளர்ப்போம் கைதட்டலை மட்டுமே பெறமுடியும். பொதுவான மக்களின் பாராட்டு அந்தப் பேச்சுக்குக் கிடைக்காது. "வசவு" ஒன்றையே தனது பேச்சுப் பாணியாக ஆக்கிக் கொண்டவர்களில் பல பேர், அடிக்கடி அரசியல் கட்சிகள் பலவற்றுக்குத் தாவுகிறவர்களாகவும் இருந்திடக் காண் கிறோம். கொள்கை, இலட்சியம், எந்த அடிப்படையும் இல்லாத சந்தர்ப்பவாதிகள் அவர்கள்! பேச்சால் மட்டுமே பிழைப்பு நடத்துகிறவர்கள். அவர்கள் கட்சி மேடை யானாலும்- அல்லது யார் வீட்டுத் திருமண மேடையானா லும் - அல்லது எந்தப் பொது நிகழ்ச்சியானாலும்-சுற்றுச் சூழல் பற்றிக் கவலை கொள்ளாமல்; தரக்குறைவான், ஆபாசமான, மிகத் தீவிரவாதிகளைப் போலக் கடுமையான வார்த்தைகளை வாரியிறைப்பர். சில நாட்கள் கழித்துப் பார்த்தால், அதே பேச்சாளர் வேறு மேடையில்-வேறு கட்சியில்! அதன்பிறகு சில வாரங்கள் சென்று பார்த்தால், அதே பேச்சாளர், இன் னொரு கட்சியில்-இன்னொரு மேடையில்! இப்படியே அவர்கள் பல கட்சிகளுக்குப் பாய்ந்து மக்களின் மதிப் பீட்டில் மிகக் கேவலமாகத் தேய்ந்து போய்விடுகிறார்கள். நடைமுறைகள் - கொள்கை மாறுபாடுகள்- இவை காரணமாகக் கட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும்; எங்கே சென்றால் வசதியும் பிழைப்பும் தொய்வின்றிக் கிடைக்கும் என்று திட்டமிட்டுச் செயல்படுவதற்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள மக்கள்; அத்தகைய பேச்சாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய மரியாதை யைத்தான் தருகிறார்கள். . நல்ல கெட்டியான அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகையைப் போலவே, அழுத்தமான குறிக்கோளுடன் பேச்சாளர்களும் தங்கள் பொதுவாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/62
தோற்றம்