15 இரவு பொதுக் கூட்டத்திலே ஆயிரக்கணக்கான மக்க ளிடையே முழக்கம். காலையில் ரயிலடிக்கோ அல்லது பேருந்து நிலையத்துக்கோ அந்தப் பேச்சாளர் வழியனுப்பி வைக்கப்பட அழைத்துச் செல்லப்படுவார். அவர் விரல் களின் இடுக்கில் சிகரெட்! வாய்வழி மூக்கு வழியே புகை மண்டலம்! முதல்நாள் பொதுக்கூட்டத்தில் பார்த்துக் களித்துப் பாராட்டியவர்களில் ஒரு சிலர் அந்த இடங்களில் இருந்து பேச்சாளரைக் காண நேர்ந்தால் அவர் மீதுள்ள மரியாதையும் மதிப்பும் சிறிது குறையத்தான் செய்யும். நாலு பேருக்கு மத்தியில் சிகரெட் விஷயத்தில் கூட எவ்வளவு கட்டுப்பாடு வேண்டும் என்று கூறுகிறபோது- மற்ற விஷயங்களைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமென நம்புகிறேன்.தான் ஈடுபாடு கொண்டுள்ள இயக்கத்திற்காக -தான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காக சில பழக்க வழக்கங்களைத் தியாகம் செய்ய வேண்டியதுதான் என்ற முனைப்பும் உறுதியும் அந்த இயக்கத்தின் பேச்சா ளர்களுக்கு மிகமிகத் தேவை. எந்த ஒரு கட்சியிலும், அல்லது பெருங் குழுவிலும் பேச்சாளர்களுக்கென்று தனிச் சிறப்பு உண்டு. தொண்டர் குழாம் அவர்களைச் சுற்றியிருக்கும். அந்தத் தொண்டர் கள் அமைத்துத் தருகிற மேடையிலேதான் நாம் பேச்சாள ராக ஒளிவிடுகிறோம் என்ற உணர்வு பேச்சாளர்களுக்கு இருந்திட வேண்டும். பேச்சாளர்கள், ஒரு இயக்கத்தின் அல்லது பெருங் குழுவின் எஜமானர்களாகத் தங்களை எண்ணிக்கொண்டு, தொண்டர்களை வேலைக்காரர்களைப் போலக் கருதி நடத்தக் கூடாது. தோழமை உணர்ச்சி பெருக்கெடுத் திடல் வேண்டும்.
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/64
தோற்றம்