கலைஞர் மு. கருணா நிதி 63 தொண்டன் உண்டியல் குலுக்கி, ஒரு காசு இரு காசு என சேர்த்து பேச்சாளருக்கு வழிச்செலவுக்குப் பணம் அனுப்பி,விளம்பரச் சுவரொட்டியடித்து இரவு பகல் கண் விழித்து அவன் கையாலேயே பசை தடவி அவைகளை ஒட்டி கம்பங்களிலும் மரங்களிலும் ஆபத்தை மறந்து ஏறித் தோரணங்கட்டி, மேடை போட்டு, ஒலி பெருக்கி அமைத்து இறுதியாகப் பேச்சாளர் வரவில்லை என்ற செய்தி கேட் டால் எப்படிச் சோர்ந்து போவான் என்பது, தொண்டர் களாக இருந்து இயக்கம் வளர உழைத்தவர்களுக்கும்-- உழைப்பவர்களுக்கும்தான் தெரியும். அத்தகைய ஏமாற் றங்களைப் பேச்சாளர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களுக் குத் தருவது கூடாது. தவிர்க்க முடியாத எதிர்பாராத நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது. என் தந்தை இறந்து எரியூட்டல் நடந்த அன்று மாலை தஞ்சை மாவட்டத்தில் திருவாஞ்சியம் என்னும் ஊரில் ஒத்துக்கொண்டிருந்த கூட்டத்திற்குத் தவறாமல் சென்று வந்தேன். முதல் மனைவி பத்மா, மரணப் படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண்மூடிக் கிடந்தபோது, ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்திற்குச் சென்று விட்டு இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன்; அவள் என்னைப் பிரிந்து நீங்காத் துயில் கொண்டு விட்டாள் என்ற செய்தியைக் கேட்க! இப்படிப் பல நிகழ்ச்சிகள் என் பொது வாழ்க்கையில்! பெரியாரிடம் கற்ற பாடங்களில் இந்தக் கடமை தவறாத பயிற்சியும் ஒன்று! கடுகுபோல் ஒரு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிடுகிற பேச்சாளர்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/65
தோற்றம்