கலைஞர் மு.கருணாநிதி 65 இவ்வாறு செயலாளரை மக்களுக்கு அறிமுகப்படுத்து வது போல, ஆளை விடாமல் கூட்டம் முடிந்ததும் வழிச் செலவுக்கு வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிட எத்தகைய தந்திரம் கையாள வேண்டியிருந்திருக்கிறது! அதுவும் அந்தக் காலத்தில் பெரும் புகழ்பெற்ற அந்தப் பேச்சாளர் களுக்கே சில இடங்களில் அப்படிப்பட்ட ஒரு நிலை! 16 எத்தனை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டினாலும் எப்படியெல்லாம் பல பேச்சாளர்கள் புகழ்க்கொடி நாட்டி யிருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தாலும்-பேச்சாளர் களாக வளருகிறவர்கள், அவரவர்களுக்கென ஒரு தனிப் பாணியை அமைத்துக்கொண்டே வளருகின்றனர். அவர்களுடைய மேடைப் பேச்சின் வெற்றிக்கு ஓரளவு பயன்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது! இந்தச் சிறிய தொடர் கட்டுரையை எழுதத் தொடங் கியவுடனேயே, ஆர்வமிகுதியால் அருமை நண்பர் கணியூர் பரூக் என்பார் பேச்சுக்கலை குறித்துப் பல்வேறு வெளி நாட்டு அறிஞர் பெருமக்கள் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதி எனக்கு அனுப்பி வைத்தார். வ அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்பு கிறேன்: "நீங்கள் கூட்டத்தில் எதைப் பேச வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே எழுதி ஆஸ்திரேலியாவுக்கு உங்கள் சொந்தச் செலவில் தந்தி கொடுப்பதாகக் கருதிக்கொள்ளுங்கள். சொல் ஒன்றுக்கு Gu-5
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/67
தோற்றம்