99 பேசும் கலை வளர்ப்போம் ஐந்து ரூபாய் கொடுப்பதாக இருந்தால், அவசியமில் லாத சொற்களை நீக்கி விடுவீர்கள் இல்லையா? மீதியுள்ள அவசியமான சொற்களே நீங்கள் பேசத் தகுதிபெற்ற சொற்கள்.” "ஸ்மீட்” "ஆழ்ந்த கருத்து வளம் இல்லாதவர்களே பேச்சை வீணாக வளர்த்திக்கொண்டே போவார்கள்." "மாண்டஸ்கியூ” "பேச்சுக் கலையின் நோக்கம்உண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல-மக்களை ணங்க வைப்பதும் முக்கிய நோக்கமாகும்." ய "மெக்காலே" "மேடைப் பேச்சில் எதிரிகளை இழித்துக் கேவல மாகவும் தரக் குறைவாகவும் புகார் கூறிப் பேசாதே! சிறிய விஷயத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்காதே." "டிஸ்ரேலி” "கோழி முட்டையின் மீது சதா அடைகாத்துக் கொண்டிருப்பது போல, நீ பேச எடுத்துக்கொண்ட விஷயத்தைப்பற்றிச் சதா சிந்தித்துக் கொண்டேயிருந் தால், கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவது போல, புதிய கருத்துக்கள் துள்ளிவரும்.' 66 'பிரௌன்” "மெருகோடும் கச்சிதமாகவும் பேசவேண்டுமென்று விரும்புகிறவர்கள், சிறந்த பேச்சாளர்களின் சொற் பொழிவுகளை அடிக்கடி கேட்கவேண்டும். நூல்களை யும் உயர்ந்தோர் கருத்துக்களையும் நிறையப் படிக்க வேண்டும். முடியாவிட்டால் மேடையில் பேசாதிருப்பது நலம்." "செஸ்டர்பீல்டு
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/68
தோற்றம்