68 பேசும் கலை வளர்ப்போம் "நாவில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்குகிறது." அல்பேனியப் பொன்மொழி அறிஞர் பெருமக்களின் கருத்துகள், பல்வேறு நாட்டுட் பொன்மொழிகள் - நாவன்மையின் பெருமையையும் அதனை எவ்வளவு முறையாகப் பயன்படுத்த வேண்டு மென்பதையும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றன. சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து" வேறொரு சொல்லால் நமது சொல்லை வெல்ல முடியாது என்பதை அறிந்து-அப்படி ஆய்ந்து அறிந்து தேர்ந்த சொல்லைக் கொண்டுதான் நமது கருத்தை விரித் துரைக்க வேண்டுமென்று வள்ளுவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். அதனால்தான் "நாநலம் என்னும் நலனுடைமை" என்று போற்றுகிறார்; நாவன்மையெனப்படும் நலம் ஒரு வகைச் செல்வமாகும் என்று புகழ்கிறார். 17 மேடையில் நின்று பேசும்போது, அந்தக் கூட்டத்தில் குழுமியிருப்போரில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதத்திற்கு மேல் தன்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். கள் என்பதைச் சொற்பொழிவாளர் மறந்துவிடக் கூடாது பேசுவதற்கு அழைக்கப்பட்டவுடன் ஒலிபெருக்கியின் முன்னால் வந்து நின்றுகொண்டு வேட்டியைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் சிலர்.
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/70
தோற்றம்