கலைஞர் மு. கருணாநிதி 69 கொண்டிருந்த வாயில் அதுவரையில் குழப்பிக் வெற்றிலைபாக்கு எச்சிலைத் துப்புவார்கள் சிலர். இருமிக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்காமலே நிற்பார்கள் சிலர். ஒலிபெருக்கி அமைப்பாளரிடம் அந்தக் கருவியைச் சரியாக வைக்குமாறு கூறிக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவார்கள் சிலர்! அந்தச் சொற்கள் ஒலிபெருக்கிவழியாகக் கூட்டத்தினர் காதுகளிலே விழுந்து -கூட்டத்தினர் பேச்சாளர்மீது ஒருவிதமான அதிருப்தியை உருவாக்கிக் கொள்ள வழி வகுப்பதும் உண்டு! சில பேச்சாளர்கள், மாலைக்காகக் காத்துக் கொண்டி ருந்து, மாலை கழுத்திலே போடப்படுகிற நேரத்திலே புகைப்படக்காரர் படம் எடுக்கிறாரா என்பதிலே ஆர்வங் காட்டி, எடுத்த எடுப்பிலேயே மக்களின் கேலிக்குரியவராக ஆகிவிடுவார்கள். ஒலிபெருக்கியின் முன்னால் நின்றுகொண்டிருக்கு பேச்சாளர் தனது பேச்சை முடிக்கும் வரையில் அந்த மேடைக்குரிய மரியாதையையும் பேச்சுக் கலைக்குரிய மதிப்பையும் பாதுகாக்கவும், போற்றிடவும் கடமை பட்டவராவார். பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் யாராவது ஓரிரு சிறுவர்கள், சிறுழியர்கள் எழுந்து செல்வதற் முயன்றிடக் கூடும். பேசுகிறவர், அதைக் கவனிக்காதது போலப் பேசிக்கொண்டிருக்க வேண்டுமே தவிர, "ஏய் யாரது! உட்காரு! இந்தாப்பா! அந்த சனியன்களை விரட்டு!" இப்படி ஏதாவது ஆத்திரத்தில் கூறிவிட்டால் அந்தப் பேச்சாளரின் தரம் மிகவும் தாழ்ந்துவிடும். நான் மேடையேறி பேசிய தொடக்கக் காலத்தில் ஆ திராவிடர் காலனிகளில் நிறையக் கூட்டங்களில் கலந்து
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/71
தோற்றம்