உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 71 மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிற பேச்சா ளர்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை வைத்துக் கொண்டே அவர்களுக்கு முன்னால் சில பேச்சா ளர்கள் தங்கள் பேச்சை நீட்டிக்கொண்டே போனால் மக்கள் பொறுமையிழந்து விடுவர். மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ. கோவிந்த சாமி அவர்கள், பதவிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்ப தென்னாற்காடு மாவட்டத்தில் தேவபாண்டலம் என்னும் ஊரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து என்னை அழைத்துக் கொண்டு சென்றார். எங்களுடன் இன்னொரு பேச்சாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் பேச்சாளர் இயக்கத்தில் நீண்டகாலத் தொடர்புடையவர். நாங்கள் மரியாதை செலுத்தக்கூடிய இடத்திலே இருந்தவர். ஆனால் பேச்சின் மூலம் மக்களை ஈர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றவர் அல்லர்! பெருங்கூட்டம் வெள்ளமெனத் திரண்டிருந்தது. ஊரே விழாக் கோலம் கொண்டிருந்தது. திரு. கோவிந்தசாமி அவர்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் பேசி முடித்தார். அடுத்து, நான் முதலில் குறிப்பிட்டவர் பேச எழுந்தார். பேசினார் - பேசினார்-பேசிக்கொண்டே இருந்தார். கூட்டத்தினர் பொறுமையிழந்து விட்டனர். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு அளிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது போலும் கூட்டத்தின் நடுப்பகுதியில் இருந்து முண்டாசு கடடிய ஒருவர் எழுந்தார். கைகளைக் கூப்பியவாறு மேடையை நோக்கி உரத்த குரலில் பேசினார். "அய்யா! பெரியவங்களே! நாங்க பதினெட்டு மைலிலேயிருந்து அவரு பேச்சைக் கேக்கிறதுக்காக வந்திருக்கிறோம். கொஞ்சம் நீங்க உக்காருரீங்களா?"