18 (Mannerism) மேனரிசம் எனப்படும் தனிப் பாங்கு அல்லது தனிப்பாணி. பேச்சாளர்களையும் ஆக்ரமித்துக் கொள்வதுண்டு.பேசும்போது அவர்களையறியாமலேயே தனிப் பாங்கான அங்கச் செய்கைகள் தவிர்க்கவொண் ணாத பழக்க வழக்கங்கள் தொடங்கி; பின்னர் அவைகளே அந்தப் பேச்சாளர்களுக்குரிய தனித்த தன்மைகளாக ஆகி விடுகின்றன. சிலர் மேடையில் நின்று ஆடாமல் அசையாமல் அருவி போல் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டேயிருப்பார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, வலப்புற மும் இடப்புறமுமாக உடலைத் திருப்புவார். கைகள் லேசாக உயரும், தாழும்! பொடிபோடும் வழக்கம் அவருக்கு உண்டு. சட்டையின் பக்கவாட்டுப் பையில் ஒருகை நுழைந் திருக்கும். அவரது பேச்சின் சுவையில் திளைத்த மக்கள் கையொலி செய்து ஆரவாரம் புரியும்போது, சட்டைப் பையிலுள்ள பொடி டப்பாவிலிருக்கும் பொடியை யாருக் கும் தெரியாமல் மூக்கில் திணித்துக்கொண்டு மேல்துண்டி னால் ஏதோ வியர்வை துடைப்பது போலத் துடைத்துக் கொண்டே தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பார். தந்தை பெரியார் அவர்கள், வயது முதிர்ந்த காலத் தில் உட்கார்ந்து கொண்டுதான் பேசுவார்! அவர் நின்று கொண்டு பேசிய காலத்தில் அவருடன் கூட்டங்களுக்குச் சென்றவர்களில் நானும் ஒருவன். சந்தனவண்ணம், அல் லது காப்பிக்கலர், சில நேரங்களில் வெண்மையும் மஞ்சளும் கலந்தது- இப்படிப்பட்ட சால்வையால் உடலைப்போர்த்தி யிருப்பார். பேசும்போது அந்தச் சால்வையை இழுத்து இழுத்துப் போர்த்திக் கொள்வார்.
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/75
தோற்றம்