உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 75 இப்படி ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏற்பட்டு விட்ட செயற்கைப் பாணிகளை அவர்களே முயன்றாலும் விடமுடியாத நிலை! நாம் பேசும்போது ஏதாவது ஒரு அங்கச் செய்கை அல்லது அங்கசேட்டை இருக்க வேண்டுமென்று அப்படி யொரு பயிற்சியை எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. சிலருக்கு அங்கச் சேட்டைகள், அவர்களது பேச்சையே மக்கள் கவனிக்காத அளவுக்கு இடையூறாக அமைந்து விடுவதும் உண்டு. ஒலிபெருக்கியின் முன்னால் நின்று நின்று தலையைச் சொரிந்துகொண்டே பேசுவார்கள்-- கையை முறுக்கிக் கொண்டே பேசுவார்கள். கழுத்திலோ, இடுப்பிலோ விரல் களை வைத்து அழுக்கைத் திரட்டிக்கொண்டே பேசுவார் கள். திரட்டிய அழுக்கை, உருண்டையாக உருட்டி மூக் கிலே முகர்ந்து பிறகு கீழே போடுவார்கள். இத்தனையும் பேசிக் கொண்டிருக்கும்போதே நடக்கும். இதுபோன்ற பாணிகளையோ, அங்கச் செய்கை களையோ பேச்சாளர்கள், மறந்தும் கற்றுக்கொண்டு விடக் கூடாது. கூடுமானவரையில் மேடையில் அதிக ஆட்டமின்றி அங்கச்சேட்டைகளை மட்டுப்படுத்திக்கொண்டு பேசுவதே நலம். வார்த்தைகளைக் குதப்புவது--கடித்துத் துப்புவது வை, கேட்போர் செவிகளில் நாராசமாக விழும். "போராட்டக்காரர்களைப் போலீசார் அடித்து விரட்டி னார்கள்" என்பதைச் சில பேச்சாளர்கள் அழுத்தம் திருத்த மாகவும், ஆத்திர உணர்வோடும் சொல்வதாக எண்ணிக் கொண்டு-"போராட்டக்காரர்களைப் போலீசார் அட்டித்து விரட்டினார்கள்" என்று வார்த்தைகளைக் கடித்து உதறு வார்கள். அந்தப் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருக்காது.