பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுநலனும் நயமும் !


முகர்ந்தளித்த மலரெடுத்து
முகரும் போதினில் - நின்
அகமலர்ந்த கனவனைத்தும்
அதில் இனிக்குதே!

குவளை கொண்ட நீரருந்தி
கொடுத்த போதினில் - நின்
உவமை இலா இதழ் இனிப்பே
ஊறிப் பொங்குதே!

கனிவாயால் கனிகடித்து
கனிந்தளிக்கையில் - நின்
கனி உடலின் சுவையனைத்தும்
களிப்பளிக்குதே!

புலவன் தொட்டப் பொருளனைத்தும்
புகழ்பெறல் போலோட காதல்
நலன் நுகர்ந்த பொருளனைத்தும்
நயம் சிறக்குதே!