பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


யாது மாகி நின்றாய் !


பாட்டெழுதிடத் தாளெடுத்திடில்
பாவையே நின் எண்ணம் !- மொழி
ஓட்டத்தின் பின்னர் காதலின் மன
உயிர் உருக்கிய வண்ணம்!

திரையினில் எழில் ஓவியத்தினைத்
தீட்டிடில் அதில் நீயே - சிறு
வரைவிலும் உடல் நெளிவழகினை
வகுத்துணர் வளிப்பாயே !

யாழெடுத் திசை மனந்தழுவையில்
யானென முனம் நிற்பாய் - பண்
ஏழிசைதொறும் காதலின் மொழி
இணைத்துவப்பைப் பொற்பாய் !

கல்லெடுத்துரு செதுக்க எண்ணிடில்
கற்பனைக்குனைத் தருவாய் - உளி
மெல்லியல்புடன் நடமிடுகையில்
மிதந்து சிற்பமாய் வருவாய் !