பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


காதன்மை


உனக்கெனக்கும் அமைந்த காதல்
உறுதி வாய்ந்தது - நம்
உளம் நிறைந்தது

கனவுபோலத் தோன்றி மறையும்
கற்பனை இல்லை - வெளிக்
கானல் நீரில்லை !

பொன்னில் உறையும் மின்னொளிபோல்
புகழ் நிறைந்தது - மறைப்
புதிர் நீ விரைந்தது

வன்னமலர் வாசம் போல
வளம் நிறைந்தது - தேன்
வண்மை சிறந்தது !

விண் நிறைந்த கோள்முதல் போல்
வியப்பொளிர்வது -- நல
விருந்தளிப்பது !

உண்முகத்துச் சிந்தனைப்பண்
ஓங்கு காவியம் - மனம்
தேங்கு ஓவியம் !