பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|() டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா செயல்+கை என்பது மனிதர்களின் செயல் ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். மனித செய்கைகள் நிமிடத்திற்கு ஒரு மாதிரி நேரத்திற்கு ஒரு மாதிரி என்று இருந்தாலும், வாழ்வை நோக்கி, அடிபோடுவதில், நடைபோடுவதில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கத்தான், செயற்கை என்று நமது முன்னோர்கள், வசீகரமாக வரையறுத்துக் கூறினார்கள். உலகம் என்பதற்கே ஒழுக்கம் என்றுதான் பொருளிருக்கிறது. உலகத்தில் உள்ள மிக முக்கியமான ஐந்து சக்திகள், அவற்றைத்தான் பஞ்ச பூதங்கள் என்று புகழ்ந்து பேசுகின்றனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்பன உலகின் வடிவங்கள், படிமங்கள். கண்ணுக்குத் தெரியாத காற்று, காற்று இரண்டு ஒன்றாகி கலந்து உருவான நீர் கனன்று வெளியாகும் நெருப்பு: எல்லாவற்றையும் ஏந்திக்கொண்டு நிற்கிற மண், எல்லாவற்றையும் தந்து கொண்டிருக்கின்ற வானம் எல்லாம் இயற்கையின் பொழிவுகள். இவை எல்லாம் ஒழுங்காக இயங்குகிறபோது, காற்று தென்றலாகிறது. நீர் பன்னிர் ஆகிறது. நெருப்பு தீபமாகிறது. நிலம் தாயாகிறது. வானம் தெய்வமாகிறது. இவையே கொஞ்சம் ஒழுங்கு மீறி இயங்குகிற போது, காற்று புயலாகவும், நீர் வெள்ளமாகவும், நெருப்பு ஊழியாகவும், மண் பூகம்பம் போலும், விண்ணில் இடி முழக்கமாகவும் வந்து, இந்த உலகை நாசப்படுத்தி விடுகின்றன. ஆகவே தான், உலகமானது உடலுக்கு முன் மாதிரியாக அமைந்து. இருந்து வழிகாட்டுகிறது. இந்த உடலைக் கொண்டு, உலகம் என்கிற சொர்க்கத்தில் உலா வர வேண்டும் என்று தினமும் நமக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறது.