பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகுக்கு பஞ்ச பூதங்கள் தான் உறுப்புகள் என்றால், உடலுக்கு பஞ்சேந்திரியங்கள் என்று 5 உறுப்புகள் இருக்கின்றன, சிறக்கின்றன. அவை கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்பன. இவை ஐந்தும் சிறப்புப் புலன்களாகும். பஞ்ச பூதங்கள் எழுப்புகின்ற ஒசையைக் காதுகள் கேட்கின்றன. ஒளியினை கண்கள் பார்க்கின்றன. மணங்களை மூக்கு உணர்கிறது. சுவைகளை நாக்கு ருசிக்கின்றது. எல்லாவற்றையும் உடம்பு உணர்ந்து, உபயோகப்படுத்திக் கொள்கிறது. உலகின் ஐம்பூதக் கூட்டமும் உடலின் ஐம்பூத இந்திரியங்களும் ஒன்றாகி உலவுகின்றன என்றோமே? இவை இப்படித்தான். நிலம் என்பது பொன்மையாக, நீர் என்பது வெண்மையாக, தீ என்பது செம்மையாக, காற்று என்பது கருமையாக, வானம் என்பது புகைமையாக அல்லவா உடம்பில் கலந்து நிற்கிறது. ஆக, உலக இயற்கை படைப்புகளில் உயர்ந்தனவற்றை உபயோடப்படுத்திக் கொள்ளும் தன்மையில்தான், மனித உடலின் உறுப்புக்கள் எல்லாம் அமைக்கப்பெற்றிருக்கின்றன. உடல் படைப்பும் அப்படியேதான் அமைந்திருக்கிறது. உலகம் என்பதற்கு மக்கள் தொகுதி என்றும் ஒர் அர்த்தமுண்டு என்று முன்னரே கூறியிருக்கிறோம். ஜீவராசிகள் எத்த ைனயோ கோடிகள் உண்டு. அந்த கோடிகளில் அழகும், அறிவும், ஆற்றலும், எழுச்சியும், ஏற்றமும் இணையிலா இளமையும், தோற்றமும் கொண்டு விளங்குவது மனித உடலாக இருப்பதால்தான், மனித உடல் மகிமை பெற்றிருக்கிறது என்று நாம் முதலிலேயே கூறினோம்.