பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 4. டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உடம்பின் வகைகள் : இவ்வளவு எடுப்பும் ஏற்றமும் தோற்றமும் மிக்க மனித தேகத்தை 5 வகையாகப் பிரித்துக் கூறுகிறார்கள் பெரியோர்கள். 1. உணவு உடம்பு (அன்னமய கோசம்) 2. மன உடம்பு (மனோமய கோசம்) 3. அறிவு உடம்பு (விஞ்ஞானமய கோசம்) 4. இன்ப உடம்பு (ஆனந்தமய கோசம்) 5. காற்று உடம்பு (பிராணமய கோசம்) உணவு, காற்று, அறிவு, மனம், இன்பம் என்று ஐந்தும் கூடி, கலந்து உறவாடி நலம் தேடிக் கொண்டிருப்பததுதான் உடலாகும். உயிரின் உடுப்புதானே உடல். கோசம் என்பது உறை, கருப்பை, கருவூலம், பொக்கிஷம் என்று பல அர்த்தங்கள் உண்டு. மனித உடம்பும் இப்படித்தான் பொக்கிஷமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதையே கிராம மக்கள் மிகவும் எளிமையாக உடம்பை இப்படி வர்ணிப்பார்கள். சோற்றுப்பை, காற்றுப்பை, ஊற்றுப்பை அகப்பை ஆனந்தப்பை என்று ஆரவாரத்துடன் புகழ்ந்து பேசுவார்கள். ஏன் உடலைப் போய் பை என்றார்கள்? பை என்றால் அழகு என்றல்லவா அர்த்தம்? இப்படி உள்ளுறுப்புகள் அழகாக இருந்தால் தானே உடல் எனும் பையும் ஒழுங்காக அழகாக இருக்கும்! ஆமாம்! உடலுக்கு மெய்ப்பை என்றும் உயிர்ப்பை என்றும் தோல்பை என்றும் பல பெயர்கள் இருக்கின்றனவே! இப்படிப்பட்ட உயிர்ப்பைக்குள், தோல்பைக்குள், மெய்ப்பைக்குள் எத்தனை எத்தனை உண்மைகளும், நுண்மைகளும், அதிசயங்களும், ஆற்றல்களும் அடங்கிக் கிடக்கின்றன தெரியுமா? நமது உடலை ஒரு மாளிகைக்கு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரு வீட்டின் அடிப்படைப் பொருளாய் அமைந்திருப்பது செங்கல், செங்கற்களை செம்மையாய் அடுக்கி வைத்தால், சுவராகிறது.