பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுவர்களை சேர்த்துப் பகுத்து வகுத்து அமைத்தால், அது அறையாகிறது. பல அறைகள் சேர்ந்து தான் ஒரு மாளிகை ஆகிறது. அது போலவே, நமது உடலின் அடிப்படைப் பொருளாக செல் (Cell) இருக்கிறது. உயிராற்றல் மிகுந்த ஒரு செல்லானது, இரண்டாகப் பிரிந்து பிரிந்து வளர்ந்து கொள்கின்ற, வளர்ந்து பெருகுகிற ஆற்றலையும் பெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட வளர்சிதை மாற்றத்தையே ஆங்கிலத்தில் (Metabolism) என்று அழைக்கின்றனர். அடிப்படைப் பொருளாக ஆதாரமாக விளங்குகின்ற செல்களின் வளர்சிதை மாற்றம் ஒழுங்காக சீரும் சிறப்புமாக, செம்மையாக, சீராக, சிதைபடாமல், பாதிப்பில்லாமல் உடலுக்குள்ளே நடைபெறுகிறவரைதான். உடலில் இளமை இருக்கும். முதுமை வர யோசிக்கும் என்பதை மனதில் இருத்திக் கொள்வது மிக மிக அவசியம். ஆற்றல் மிக்க பல செல்கள் ஒன்று சேர்ந்து, திசுக்கள் (Tissues) என்று ஆகின்றன. பல திசுக்கள் சேர்ந்து தான் உறுப்புக்கள் (Organ) ஆகின்றன. திசுக்களில் பல வகை உண்டு. அவை இணைப்புத் திசு, எலும்புத் திசு, தசைத் திசு, நரம்புத்திசு ஆகும். இப்படி ஒரே மாதிரியான பணிகளைக் கொண்ட உறுப்புக்கள் பல சேர்ந்து தான் உறுப்பு மண்டலமாக அமைந்து இருக்கிறது. (System). - உதாரணமாக, இடையில்லாமல் மூச்சிழுத்து வெளிவிடும் சுவாச மண்டலம், மூக்குக்குழிகள், தொண்டை, குரல்வளை, முச்சுக் குழல், மூச்சுக் குழாயின் கிளைகள், நுரையீரல்கள் என்கிற உறுப்புக்கள் சேர்ந்தது தான் சுவாச மண்டலமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு நமது உடலில் 9 மண்டலங்கள் அமைந்திருக்கின்றன. அவை பின் வருமாறு :