பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


[2. காற்றைப் பிழக்கும் ಹೀD6] காற்றைப் பிடிக்க முடியுமா? காற்றைக் காண முடியாது. கண்ணால் பார்க்கவே முடியாது. அதை உணரலாம், உய்த்தறியலாம். ஆனால் பிடிக்க முடியுமா? இது என்ன புதுக்கதை? முடியும் என்று கதை விடுகிறீர்களா? நம்மால் முடியும் என்று கதை விடப் போகிறீர்களா? என்று நீங்கள் கேட்பதை என்னால் உடனே உணர முடிகிறது. உண்மைதானே! கண்ணுக்குத் தெரியாத காற்றே நீ கற்பனைச் சொல்லுக்கு ஊற்றே நீ என்று கவிஞர்கள் பாடுவது உங்களுக்கும் கேட்டிருக்குமே! காற்று என்றதும், இப்படி பலப்பல கற்பனைகள் தோன்றும், தூண்டும். நிச்சயமாக நமது நெஞ்சத் திடலில், எண்ணப் பந்துகள் துள்ளிக் குதித்துக் கொண்டே தான் இருக்கும். ஆகவே, காற்று என்றால் என்ன என்பதைப் பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்வோம். பிறகு காற்றை நம்மால் பிடிக்க முடியுமா? அடக்க முடியுமா, ஜெயிக்க முடியுமா என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்பாக, காற்று என்பதற்குரிய ஒரு விளக்கத்தை முதலில் காணலாம். காற்று என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. அதிக பலமுள்ளது. இது கொண்டல், கோடை, வாடை, தென்றல் என பலவகைப்படும். இது கண்ணால் காணப்படும் பொருள் அன்றாயினும், ஸ்பரிசத்தால்