பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உணரும் பொருள். இது உஷ்ணத்தால் இலேசாகும். குளிர்ச்சியால் கனமாகும். இது தானடைந்த பொருள்களின் மணம் முதலியவற்றை விரைந்து செலுத்தும் வேகமுடையது. சலித்துத் திரட்டுவது என்று அபிதான சிந்தாமணி நூல் அழகாக விளக்கம் தருகிறது. காற்று பஞ்ச பூதங்களில் ஒன்று. உலகத்தை ஆக்கி, உருவாக்கி, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அந்த ஐந்து மகாசக்தி வாய்ந்தவைகள் நீர், நிலம், நெருப்பு. காற்று, விசும்பு என்பனவாகும். இந்த ஐந்தும் அருமையானவை. ஆற்றல் மிக்கவை என்பது உண்மைதான் என்றாலும், இவை அனைத்திலும் ஊடுருவி உட்புகுந்து, ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது காற்று தான். காற்றிரண்டு ஒன்றாகிக் கலந்து, நீராக இருக்கிறது. என்பது விஞ்ஞானத்தின் வெளிப்பாடு. இதுவும் விந்தையான உண்மையாகும். நெருப்புக்கும், காற்றுக்கும் நிறைந்த நுண்ணிய உறவு உண்டு என் நீங்கள் நிதமும் நிதர் க பார்க்கக் கொண் க்கின்றீர்கள். வானம் என்றால் முழுவதும் காற்று மண்டலம் தானே! வானகமும் வையகமும் என்று எங்கும். எப்பொழுதும் மறைந்து நிறைந்து கிடக்கும் பெருமை காற்றுக்கே உண்டு. எங்கும் நிறைந்து பரவி கிடப்பதை ஆங்கிலத்தில் AIR என்கிறார்கள். நாம் தமிழில் வாயு என்கிறோம். ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிப் பாய்ந்து செல்லும் காற்றை ஆங்கிலத்தில் Wind என்கிறார்கள். அதனை நாம் பருவக்காற்று என்கிறோம். இத்தகைய பண்புள்ள பருவக்காற்றுதான், உலகத்தையும் உலகத்தின் குடிகளாகிய உயிரினங்களையும், கருணையுடன் காத்து உதவுகின்றது. காற்று என்ற சொல் கால்+து என்ற இரண்டு சொற்களின் இணைப்பு என்பார்கள். கால் என்றாலே காற்றுதான்.