பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருபா 100 பப தருடய பாரா பபUா படா டயடய 1 / --مے கால் என்ற சொல்லிலிருந்து தான், காலம் என்ற சொல் பிறந்திருக்கிறது என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள். காலத்தையும் அதற்கான பருவங்களையும் உண்டாக்குகின்ற உன்னத சக்தி, காற்றுக்குத்தான் அமைந்திருக்கிறது. கார்காலம், குளிர்காலம், முன்பணிக்காலம், பின்பணிக் காலம், இளவேனிற்காலம், முதுவேனில் காலம் என்றெல்லாம் அமைவது, காற்றின் திசைமாறும் போக்கால்தான் பிறந்து வருகின்றன. காலம் பார்த்து உடலிலிருந்து உயிரைப் பிரிக்கின்ற காரியத்தைச் செய்வதனால்தான், எமனுக்கு காலன் என்ற பெயரும் உண்டு. அந்த காரியத்தையும் விருப்பு வெறுப்பின்றி, கண்ணை மூடிக் கொண்டு நியாயமாக, பரிதாபம் பார்க்காமல் புரிவதால்தான், அவனை அந்தகன் என்றும் கூறுவார்கள். சுவாசிக்கின்ற அனைத்து உயிர்களின் காற்றினைக் கட்டி இழுத்து முடித்து விடுவதால்தான், யாமன் என்றும், எமன் என்றும் அவன் அழைக்கப்படுகின்றான். அண்டகம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது காற்று என்பது நமக்கு நன்றாகவே தெரியும். எவ்வளவு காற்று இந்த பூமியில் பரவி இருக்கிறது? இருக்கும் என்று, ஆய்வு மூலமாக, ஒர் அளவினை அறிந்து கூறியிருக்கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த பூமியின் பரந்து கிடக்கும் காற்றின் அளவு 5000 மில்லியன் டன்கள் ஆகும். அதிலே, மனித இனங்கள் உயிர் வாழ உதவுகின்ற பிராணவாயுவின் அளவு 20.95 சதவிகிதமாக அமைந்திருக்கிறது என்பர் அறிஞர்கள். பிராணவாயு போக, மீதி உள்ளவை, நைட்ரஜன் ஆர்கான், சார்பன்டை ஆக்சைடு, ஹெலியம், நைட்ரஸ் ஆக்ஸைடு ஒசோன், லெனான் என்கிற காற்று வகைகளாகும்.