பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இப்படிப்பட்ட ஆற்றல் மிகுந்த காற்றை, நமது உடல் எப்படி போற்றி ஏற்றுக்கொள்கிறது என்பதை கெ"இ" புரிந்து கொண்டோமானால், காற்றின் பெருமையும் புரியும். அந்த காற்ற"து உடலுக்குள் எப்படிப்பட்ட வல்லமையை வழங்குகிறது என்ற விவரமும் புரியும். நயமும் புரியும். மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கிறோம். சிறிது நேரம் கழித்து இழுத்த காற்றை வெளியே விடுகிறோம் என்பதும் நாம் இயல்பாக, இயற்கையாக சிரமமின்றி எந்த வித முயற்சியும் இன்றி எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்குள்ளே நாம் ஆற்றுகின்ற காரியமும், ஏற்றுகின்ற சக்தியும் மாற்றுகின்ற வித்தையும் மார்க்கமும், தான் எண்ண எண்ண, நினைக்க நினைக்க விந்தையாக இருக்கிறது. விஞ்ஞானமாக சிரிக்கிறது. உடலுக்குள் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் செயலுக்கு மொத்தமாக சுவாசித்தல் என்று பெயர். ஆனால் அவற்றை இழுக்கும் செயலுக்கு ஒரு பெயர். வெளியே அனுப்பும் செயலுக்கு இன்னொரு பெயர். காற்றை உள்ளே நிறுத்தி வைத்திருக்கும் செயலுக்கு மற்றொரு பெயர் என்று நமது முன்னோர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்றால், மூச்சிழுக்கும் காரியத்தை, ஒரு முழு முதல் சுகமாக கருதியதால் தான். சுவாசிக்கும் செயலை தமிழ், மலையாளம், சமஸ்கிருதம்,இவற்றில் எப்படி அழைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். 1. opäämä Qūgā56) : Inhalation 96,605. Inspiration 916)5ug Breath in என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த மூச்சிழுக்கும் செயலுக்குத் தமிழில் பூரகம் என்று பெயர் 2. elp&6og Gl6)16f|Guu 6sl(Blg,6o : Exhalation, Expiration g|606og Breath out என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதற்கு தமிழில் இரேசகம் என்று பெயர்.