பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரின்பம் தரும் பிராணாயாமம் 2] - - 3. மூச்சை நிறுத்தி வைத்தல் : இதை ஆங்கிலத்தில் Retentio goug Holding the breath stors) on moistiãoir. கையே கமிமில் கம்பகம் என்பார்கள். 卤 த கு சமஸ்கிருத மொழியில் நுரையீரலை காற்றால் நிரப்பும் செயலை பூரகா என்றும் நுரையீரல்களில் இருந்து காற்றை வெளியேற்றும் செயலை ரேசகா என்றும் மூச்சிழுத்தலோ, அல்லது மூச்சை வெளியே விடுதலோ இல்லாமல் காற்றை உள்ளடக்கி இருத்தி வைப்பதற்கு கும்பகா என்றும் பெயரிட்டு அழைத்திருக்கின்றார்கள். 4. சுவாசமின்றி இருத்தல் : காற்றை இழுக்காது, அடக்காது. வெளியே விடாது என்பதுபோல, சும்மா இருக்கும் நிலை. இதற்கு சன்யகம் என்று பெயர். கி.மு. 100 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்த தெய்வத் தமிழ்ச் சித்தர் திருமூலர் இதை அழகான பாடலாகவே பாடியுள்ளார். ஏறுதல் பூரகம், ஊறுதல் ரேசகம் (ஆறுதல் கும்பகம்) பாட்டு 550 என்பதாக, இதையே பிங்கல முனிவர் என்னும் பேரறிவாளர் தாம் எழுதிய பிங்கல நிகண்டு என்னும் நூலில் இப்படி பாடியிருக்கிறார். இரேசக பூரக கும்பகம் ஏற்றி வாயுவை அடக்கல் பிராணாயாமம் (423) நாம் சாதாரணமாக, நம்மை அறியாமலேயே சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். சுவாசத்தை நாம் நினைப்பதுமில்லை. பிறப்பதுமில்லை. துறப்பதும் இல்லை. ஆனால் அது நடந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் வாழ்க்கை இருக்கும். இவ்வாறு ஏனோ தானோ! என்று சுவாசிக்காமல் மனதால் கினைத்து, மாண்புடன் முனைந்து செயல்படுகின்ற மனோகரமான *ாரியம்தான் பிராணாயாமம் என்பதாகும்.