பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் வலம் வருகின்ற பொதுவான காற்றிலிருந்து, உயிரைக் காத்து உடலை வளர்க்கின்ற ஆற்றல் பெற்ற பிராண வாயுவை மிகுதியாகப் பெற்றுக் கொள்ளும் நினைப்புடனும், உழைப்புடனும் முனைப்புடனும் செய்கின்ற மேன்மையான காரியமே பிராணாயாமம் ஆகும். பிராணாயாமம் என்பது வெறுமனே காற்றை இழுத்து அடைத்து வைத்து, அகற்றிவிடும் அலட்சியமான காரியம் அல்ல. அதில் பெரிய ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்று சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் சிலாகித்துச் சொல்கின்றனர். உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும், தன்னை அறியாமலேயே சுவாசிக்கிறது என்று சொன்னோமல்லவா? அது அப்படி அல்ல. மூச்சை சுவாசிக்கும்பொழுது என்று ஒவ்வொரு உயிரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது மந்திரம் என்கிறார்கள் செபிக்கிறது என்கிறார்கள். என்ன அந்த மந்திரம்? என்ன அந்த பிரார்த்தனை? மூச்சை உள்ளே வாங்கி சுவாசத்தை இழுக்கும் போது, அந்த உயிர் ஏற்படுத்துகிற உயிர்ப்பினாலான சத்தம் சா அகம் (Sah+Aham) என்பது. சா என்ற வடமொழி சொல்லுக்கு அவன் அதாவது அழியாத உயிர் சக்தி கொண்ட ஆண்டவன். அகம் என்றால் நான் என்றும் பொருளாம். உயிர்ப்பு சக்தியான காற்றை உள்ளிழுக்கும்போது ஆண்டவனாகிய அவன் என்னுடன் கலக்கிறான் என்பது மந்திரம். காற்றை வெளியே விடுகிறபோது ஹம் சா என்று வெளிவருகிறது. அதற்கு நான் (Ham=1Sah=He) என்றும். நான் அவனை தொடர்கிறேன். என்பதாக அந்த மந்திரம் இருக்கிறது என்பர்.