பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- இதற்கு சமஸ்கிருதத்தில் அஜபாமந்திரா (Ajapamantra) அன்று பெயர். அஜபா மந்திரம் என்றால் தன் நினைவு இல்லாமலேயே தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்கிற பிரார்த்தனை, இடைவிடாமல் சொல்கிற மந்திரம் என்பது அர்த்தமாகும். மந்திரம் என்றால் என்ன அர்த்தம்? மன்+திரம் என்று பிரிகிற இந்த சொல்லுக்குரிய அர்த்தமானது மன் என்றால் நினைத்தல் என்றும், திரம் என்றால் திரும்பத் திரும்ப என்றும் பொருள் தருகிறது. அதாவது நல்லனவற்றை மீண்டும் மீண்டும் நினைத்து அதைத் தொடர்ந்து மனதாலும் சொல்லாலும் உச்சரித்துக் கொண்டிருப்பதையே மந்திரம் என்கிறார்கள். பிராணாயாமம் பற்றி நன்கு அறிந்து கொண்டு, அதன் பெருமையையும் மகிமையையும் உணர்ந்த மனிதர்கள், இதைத் தங்கள் ஆத்மபலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவே பயன்படுத்திக் கொண்டார்கள். ஆத்ம பலம் என்றால் வேறு ஏதோ என்று எண்ண வேண்டாம். பிராணாயாமம் என்ற யோகப் பயிற்சி செய்தேன். எனக்கு அதன் பலனாக வைராக்கியம் கிடைத்தது என்கிறார் திருமூலர் (2829). ஒவ்வொரு முறையும் காற்றை உள்ளே இழுக்கும்போது, இறைவனின் அருளையே வாழ்க்கையின் பரிசாகப் பெறுகிற பாக்கியம் கிடைக்கிறது என்ற தத்துவமே பிராணாயாமாக இருக்கிறது. இந்த இனிய நலமே, ஆத்ம பலமாகப் பெருகுகிறது. ஒவ்வொரு உடலிலும் இந்த பிராணன் என்கிற உயிர்க்காற்று இருக்கும் வரை அதற்கு நடமாட்டம் இருக்கிறது. அந்த நடமாடும் ° டலுக்கு ஜீவாத்மா என்று பெயர். உலக மகா சக்தியாக விளங்குகிற இறைவனை பரமாத்மா சின்று அமைக்கின்றனர்.