பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருபா பயா படப :معه رویا رعت பர பயயா படா டபடப – ". லிெல் ஏற்படுகின்ற காற்றுத் தொந்தரவையே குறிக்கும். ஆக வாயு தொந்தரவு முற்றுகிறபோது தான் வாதம் என்ற நோய் வருகிறது. பாதகமான நிலையும் ஏற்படுகிறது. நமது உடம்பு மூன்று கூட்டுகளினால் ஆகியுள்ளது. அவை வாதம், பித்தம், சிலேத்துமம். சிலேத்துமம் என்பது சீதம். சீதம் என்றால் குளிர்ச்சி. இதையே சித்த மருத்துவத்தில் வளி, அழற் ஐயம் என்று மூன்று நோய்களாகக் குறித்துக் காட்டுவார்கள். வளி என்பது வாதம், அழற் என்பது பித்தம், ஐயம் என்பது குளிர்ச்சி, ஐ என்றால் கோழை என்றும் பொருள். ஜீரணம் சரியாக ஆகாதது (அஜீரணம்) மலச்சிக்கல், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் வாத நோய்கள் ஆகும். நுரையீரலில் ஏற்படுகின்ற நோய்கள் எல்லாம், பித்த நோய்கள் ஆகும். சளி, கபம், என்புருக்கி, ஆஸ்துமா போன்றவை எல்லாம் சீதத்தால் ஏற்படுவனவாகும். இதனால்தான் வள்ளுவர் வாதம் பித்தம், சீதம் மூன்றும் குறைந்து போக அதிகமாகப் போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாடினார். இப்படி கட்டுப்படுத்தி வைக்கும் தந்திரமான முறைக்குத்தான் பிராணாயாமம் என்று பெயர் சூட்டிப் புகழ்ந்தனர் நமது முன்னோர்கள். பிராணாயாமம் எப்படி செய்வது? அவற்றின் பயன்கள் எவை என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்தப் பிராண வாயு என்னும் உயிர்காற்று, உடலுக்குள் சென்று செய்கிற விந்தையான வேலைகளை மகலில் கெரிக்க கொள்வோம்.