பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாம் சாதாரணமாக இழுத்து வெளியிடும் காற்று. நமது சரீரத்திற்குள் செய்து கொண்டிருக்கின்ற சித்து வேலைகளை நாம் அறிந்து கொள்கிற போது தான், நமது உடலின் பெருமையை நன்றாக் புரிந்து கொள்ள முடியும். நாம் இழுக்கிற காற்றானாது, மூக்குக்குழலுக்குள் சென்று அங்கிருந்து மூச்சுக் கிளைக்குழல்கள் பகுதிக்குச் சென்று, நுரையீரல்களை அடைகின்றன. இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருக்கும் நுரையீரல்களில், காற்றை ஏற்றுக் கொள்ளும் காற்றுப் பைகளின் கொள் அளவானது 800 முதல் 1000 சதுர அடி பரப்பளவாக (84 மீட்டர் முதல் 93 மீட்டர்) இருக்கிறது. இது எந்த அளவு இருக்கும் என்றால், ஒருவரது தேகத்தின் வெளிப்புற பரப்பளவை விட 40 மடங்கு அதிக பரப்பளவு கொண்டதாக இருக்கும். இது ஒரு டென்னிஸ் ஆடுகளப் பரப்பளவு இருக்கும் என்று உதாரணமாகக் கூறுவார்கள். இந்த இடது வலது நுரையீரல்களின் மொத்த எடை 2.5 பவுண்டாகும். அதாவது 1.13 கிலோவாகும். நுரையீரலுக்குள் சென்ற காற்றிலிருந்து பிராணவாயு பிரித்தெடுக்கப்பட்டு, உள்ளே சேர்த்து வைக்கவும், மீதியுள்ள காற்று அசுத்தமாகி கரிய மில வாயு என்ற பெயரில் வெளியேற்றவும்படுகிறது. நாம் இயற்கையாக இழுக்கிற சுவாசக் காற்றுக்கும் அளவு எவ்வளவு என்று கணக்கிட்டிருக்கின்றார்கள் வல்லுநர்கள். இயற்கையாக நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு 500 கன சென்டி மீட்டர் இருக்கிறது என்பது ஒரு கணக்கு. - கொஞ்சம் ஆழ்ந்து சுவாசித்தால், 1500 கன சென்டி மீட்டர் அளவு அதிகமாக இழுக்க முடியும் என்பதாகவும் கணக்கிட்டிருக்கின்றார்கள்.