பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


= நாம் இழுத்த காற்றை முழுமையாக வெளியேற்றிய பிறகும் கூட, நுரையீரல்களில் சுமார் 1000 கன சென்டி மீட்டர் காற்றளவு தேங்கியிருக்கும். இந்த எஞ்சிய காற்று உள்ளே இருந்து கொண்டு இருப்பதால் தான், தண்ணிருக்குள் வைக்கப்பட்டிருக்கின்ற நுரையீரல் மூழ்காமல் இருக்கிறது. இப்படி உள்ளே இருக்கின்ற பிராண வாயுவின் திறமை எப்படியிருக்கிறது என்பதை மட்டும் இந்தப் பகுதியில் காணலாம். பிராணன் போகாமல் காப்பாற்றுகிற காரியத்தை செய்வதால்தான் இதற்கு பிராண வாயு என்று கூறினோம். இது உயிரின் இயக்கத்திற்கு உறுதுணையாக உறுப்புக்களை கட்டுப்படுத்த நாம் இழுத்திருக்கின்ற பிராண வாயுவானது பத்து பகுதியாகப் பிரிந்து கொண்டு பணியாற்றுகிறது. பிரிந்த காற்றின் பெயர்களைக் கீழே தந்திருக்கிறோம். சமஸ்கிருதம் தமிழ் 1. பிராணன் - உயிர்க்காற்று 2. அபாணன் *= மலக்காற்று 3. உதாணன் - ஒலிக்காற்று 4. வயானன் *- தொழிற்காற்று 5. சமா னன் * நிரவுகாற்று 6. நாகன் = கொட்டாவிக் காற்று 7. கூர்மன் = விழிக்காற்று 8. கிருகரன் - தும்மற் காற்று 9. தேவதத்தன் - கொட்டாவிக் காற்று 10. தனஞ்செயன் - வீங்கற்காற்று சமஸ்கிருதத்தில் கூறப்படுகின்ற 10 வாயுப் பிரிவுகளை பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்ரா எனும் நூலில் குறித்துள்ளார். இதையே தான். தமிழ்ச் சித்தரான திருமூலர் தனது பாடலில், நிரம்பி ஈரைந்து காற்று என்று பாடியுள்ளார்.