பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நாபியி னின்றால் கோவாதது உதானன் (35) தொண்டையில் ஏற்படுகின்ற ஒலியை உண்டாக்கும் காரியத்தையும் செய்கிறது. 4. வியானன் . இதை தொழிற்காற்று என்பார்கள். இந்த காற்று சரீரம் முழுவதும் வியாபித்து இருப்பதால் வியானன் என்றும், இது காற்றையும் உணவையும் உடல் முழுவதும் கொண்டு செல்கின்ற ஒப்பற்ற தொழிலை செய்கின்ற காரணத்தால் தொழில் காற்று என்றும் பெயர் பெற்றிருக்கிறது. சரீரம் முழுவதும் வியாபித்து நிற்பது வியானன் (36) 5. சமானன் . இதை நிரவு காற்று என்பார்கள். இதை காற்று நிரப்புதல் அல்லது சரிப்படுத்துதல் என்கிற வேலையைச் செய்வதால் நீரவுக் காற்று என்றும், உடல் முழுவதும் சமப்படுத்துகின்ற தன்மையில் இயங்குவதால் சமானன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வேலையாவது, ஜீரணிக்கின்ற வேலையை துரிதப்படுத்தி, உணவை ஜீரணிக்கின்ற பணியில் உதவுகின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறது. கந்தரசக் குழியிற் சந்திடை சமானன் (37) 6. நாகன் : இதை ஏப்பக் காற்று என்பார்கள். இந்த காற்றானது வயிற்றிலே ஏற்படுகின்ற வாய்வுத் தொல்லை பிரச்சினைகளைத் தீர்க்க, வாய்வழியாக வாயுவை வெளியேற்றுகின்ற (Belching) பணியை செய்கிறது. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்ட பிறகு, கீழ்ப்பகுதியில் காற்றை வெளியேற்ற முடியாதபோது வாய் வழியாக எப்பம் விட்டு, சுக நிலையை எய்திட உதவுகிறது. முடக்கலும் நீட்டலும் கிளப்பது நாகன் (38) 7. கூர்மன் : இதை இமைக்காற்று என்று அழைப்பாார்கள். விழிகளுக்குள் துாசி மற்றும் வெளிப்புற பொருட்கள் நுழைந்து