பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


S S AAAA SSAAAAAAS S விடாமலும், பிரகாசமான வெளிச்சம் கண்ணுக்குள் புகுந்துவிடாமலும் இமைகளை மூடச் செய்து விழிகளை காக்கின்ற கடுமையான காரியத்தை செய்கிறது. நினைக்கும் முன்பே கண்களை மூடவைத்துக் காக்கின்ற கடமையை கூர்மன் செய்துவிடுகிறது. உரோமம் புளகித்து இசைப்பது கூர்மன் (39) 8. கிருகரன் : இதை தும்மற்காற்று என்பார். கிருகரன் என்பது முகத்திடை கெழுமி தும்மலும் சினமும் வெம்மையும் விளைக்கும் (பிங்கலம் 40) இந்தக் காற்றானது, சுவாசப் பாதைக்குள் அதாவது மூச்சுக் குழலுக்குள் ஏதாவது வெளிப்பொருளானது புகுந்துவிட்டால், அல்லது தொண்டைப் பகுதிக்கு வந்து விட்டால், அதனை உடனடியாக வெளியேற்ற ஒரு தும் மலையோ அல்லது இருமலையோ ஏற்படுத்திவிடுகிற வேலையை வெகுவேகமாக செய்து காப்பாற்றி விடுகிறது. 9. தேவதத்தன் : கொட்டாவிக் காற்று என்று இந்தக் காற்றை கூறுவார்கள். உடல் களைத்துப் போகிற போது, உயிர்க்காற்று அதிகம் தேவைப்படும் நேரத்தில், கொட்டாவியை உண்டாக்கி அதிக உயிர்க்காற்றை உடம்பு பெறச் செய்ய உதவுகிறது. கொட்டாவி விடுகிறபோது வாயை அதிகமாகப் பிளந்து நிறைய காற்றை உள்ளுக்குள் சுவாசிக்கிறோம். அப்போதுதான் உடல் நிறைய பிரான வாயுவைப் பெற்று, களைப்பிலிருந்து உடனே விடுதலை பெற்றுவிட முடிகிறது. ஒட்டமும் களைப்பும் வியர்த்தலும் விளைவிப்பது தேவதத்தன் என்று விளக்கம் கூறுகிறது பிங்கலநிகண்டு (41) -