பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-سے 10. தனஞ்செயன் : இதை வீங்கற் காற்று என்று கூறுவார்கள். மேலே கூறிய 9 காற்றுகளும் உடலுடன் உயிர் ஒட்டி உறவாடி உலவுகிற வரை உடம்பிற்குள்ளேயிருந்து உறுதொழில் புரிந்து, உற்ற துணையாக செயல்பட்டு வரும். உடலை விட்டு பிராணன் என்கிற காற்று பிரிந்து விட்டால், உடல் பிரேதம் ஆகிவிடுகிறது. ஆமாம் சவமாகிவிடுகிறது. உடல் சவம் ஆன பிறகும் கூட, உடலுக்குள்ளே இந்த தனஞ்செயன் காற்று தங்கியிருக்கும். இந்தக் காற்று உடலில் தங்கியிருக்கும் வரை, உடலானது வீங்காது. நாற்றம் அடிக்காது. உடலின் தன்மையும் மாறாமல் எடை கூடாமல் இருக்கும். இவ்வாறு நேரம் கழித்து, காலம் தாழ்த்தி உள்ளே இருக்கிற தனஞ்செயன் காற்று தேகத்தைவிட்டு வெளியேறுகிறபோது, பிணத்தையும் துள்ளத் துடிக்கச் செய்து விட்டுத்தான் வெளியேறும். இந்த நேரத்தில், பிணத்தின் அருகில் இருப்போர், அதன் துடிப்பைப் பார்த்துவிட்டு, உயிர் வந்து விட்டது என்று சந்தோஷக் குரல் எழுப்புவதும் சகஜமாக நடப்பது தான். இதை பிங்கால முனிவர் மிக அழகாக எழுதிக் காட்டுகிறார். ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின் உயிர் உடல் விடினும், தானுடல் விடாது ஒக்கு நின்று அங்கு உடலினை வீக்கித் தலைகிழித்து அகல்வது தனஞ்செயன் ஆகும் (42) உயிர்களிடத்தில் நீங்காத அன்பினை உடைய நல்லவரோடு கொண்ட நட்பால், உயிர் போகினும் தான் போகாது, பிறகு அங்கிருந்த உடலினை அழித்தபடி, தலைகிழித்து அகல்வது னேஞ்செயன் எனும் காற்றின் செயலாகும் என்பதுதான் இந்தப் "டலின் அர்த்தம்.