பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[5. மாண்புமிகு மனித உடல்) பிராண வாயுவானது பத்து வகையாக தனக்குள்ளே பிரிந்து நின்று, உடம்பின் ஒவ்வொரு செயலுக்கும் மூலமாக இருந்து முக்கிய பணியாற்றுகின்றது என்பதை விளக்கமாக அறிந்தோம். இனி அந்த உயிர்க்காற்று உலா வந்து உயிர்ப்புப் பணியாற்றும் உடலின் பெருமை பற்றியும் தெரிந்து கொள்வோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது உலக மரபு. இனிய இயற்கையின் எடுப்பான செயல் தொடுப்பாகத் தொடரும் தூய நியதி. பழையன போயின என்கிறபோது, புதிய உயிர்களும் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன. உலகம் நீண்டு நிலவி வாழ்ந்க வர வேண்டாமா! - இல்லாவிட்டால் உயிர்கள் எது? உயிர்களின் கூடான உடல்கள் எல்லாம், கருவிலே தான் தோன்றுகின்றன என்பது நமக்குத் தெரியும்? எப்படி என்கிறபோது கொஞ்சம் சலனம், சங்கடம், சந்தேகம். நான்கு வகையான உயிர்கள் உருவாகின்றன. அதாவது உடல்கள் உண்டாகின்றன. அவை அண்டஜம், சுவேஜதம், உத்பிஜ்ஜம், சராயுஜம் என்பதாகும். பயந்துவிடாதீர்கள். சமஸ்கிருதச் சொற்கள் தான். 1. அண்டஜம் என்றால் முட்டையிலிருந்து தோன்றுவன. பறவைகள் ஊர்வன, நீர் வாழ்வன போன்ற உயிர்கள் தோன்றும் விதம். 2. சுவேஜதம் என்றால் வேர்வையிலிருந்து தோன்றுவன.