பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6. சுகம் தரும் சுவாசம்) பிராண வாயு தான் பிராணனைக் காக்கிறது. பிண்டத்தை வளர்க்கிறது. பெருக்க வைக்கிறது. இந்த பிண்டத்திற்குத்தான் எத்தனை பெயர்கள்? உடல், உடம்பு, தேகம், சரீரம், ஆக்கை, மெய் என்று எத்தனை பெயர்கள், காயம், மேனி என்றும் அழைப்பார்கள். உடல் என்றால் பொன், பொருள் என்று அர்த்தம். உடம்புக்கு என்றால் ஒத்துப்போவது, உடன்படுவது என்று அர்த்தம். ஆமாம். உயிருக்கு இருப்பிடமாக இருந்து உயிருக்கு உடன் சென்று உலா வரும் பெருமையை உடையது. தேகம் என்றால் ஒயாது தகனமாய் தகித்துக் கொண்டிருக்கும் தன்மையுடையது. நமது உடலின் வெப்பம் 98.4 டிகிரி என்று கூறுகின்றார்களே ! 60 வால்ட் பல்பு எரிந்தால் என்ன வெப்பம் ஏற்படுமோ. அந்த வெப்ப சக்தியைக் கொண்டிருக்கிறது. நமது உடல் , அதனால்தான் தேகம் என்றனர். தெய்வம் குடியிருப்பதால் தேகம் என்றும் கூறினர். சரீரம் என்றால் இடையறாது ஜீரணமாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உடலின் இயல்புதானே இது. ஆக்கை என்றால் ஆக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். பஞ்ச இதங்களால் பண்பான உறுப்புகளால் நமது உடல் *ருவாக்கப்பட்டிருக்கிறது.