பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காயம் என்றால் அழகான காய் என்று பொருள். பக்குவமாக பாதுகாத்தால் பழம் ஆகும். சுவையும் தரும் பகுத்தறிவு இன்றி பாழ்படுத்தினால் குன்றி விடுவதுடன் வெம்பி போய் விடும் வேதனையுடன் காயும். ஆமாம். எரிக்கும். மினுக்குதல் அழகாயிருத்தல் என்பதற்கு தான் மேனி என்ற அழைத்தனர். உடலுக்கு வீடு என்றும் பெயர். இன்பத்தை பேரின்பத்தை சுகத்தை, சுபிட்சத்தை உடம்பு அளிப்பதால் தான் இப்படி ஏற்றமாக சொர்க்கம் என்றும் அழைத்தனர். ஆனால், இறந்து போகின்ற உடலைப் போய், நம்மவர்கள் மெய் என்று அழைத்திருக்கின்றார்களே! அது ஏன்? உண்மையில் நடமாடி வாழ்வு தருகிறதல்லவா! பொய்யென்று அதனை அமங்கலமாகக் கூறாமல், மெய் என்றனர். உண்மையின் ஊற்றல்லா உடம்பு. உடம்பைக் கோயில் என்பார்கள். ஆலயம் என்பார்கள் உள்ளம் பெருஞ்கோயில் ஊண் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானர்க்கு வாய் கோபுர வாசல். பெருமையாகப் பாடப்பட்ட பாடல் வரிகளைப் படித்தீர்களா? கோ+இல் = கோவிலாகிறது கோ என்றால் கடவுள். இல் என்றால் தங்குமிடம். அதாவது கடவுள் தங்குமிடம் என்று அர்த்தம் ஆ+லயம் ஆலயம் ஆ+லயம் ஆலயமாகிறது ஆ என்றால் ஆன்மா. லயம் என்றால் சேர்வதற்குரிய o ஆன்மா தான் ஜீவாத்மா எனப்படுகிறது. உடலோ தேவாலய - سید حح ۱ کند. حم