பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரின்பம் தரும் பிராணாயாமம் 45 - கரியமில வாயு இருக்கும் இடமெல்லாம் வலி இருக்கும். அசதி இருக்கும். இயங்க முடியாத ஒரு இம்சை இருக்கும். மீண்டும் நிறைய சுவாசித்து கரிய மில வாயுவை வெளியே அகற்றி விட்டு, பிராணவாயுவை உடல் உறுப்புகளில் நிரப்பிவிடுகிறபோது தான் உடல் சுறுசுறுப்படைகிறது. இதைத்தான், நாம் புத்துணர்ச்சி என்கிறோம். புத்துணர்ச்சி பெற, உயிர்ப்பு சக்தி அதாவது உயிர்க்காற்று நிறைய வேண்டும் என்ற உண்மை இப்போது நமக்குப் புரிகிறது. அதற்கு எப்படி சுவாசிக்க வேண்டும்? அந்த அரிய முறையை, அதிசய வழியை அற்புத நிலையை கற்றுத் தருவதுதான் பிராணாயாமம். எப்படி சுவாசம் இழுப்பது என்கிற நுண்ணிய முறைகளை, ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதானது நோய்களை விற்று, ஆரோக்கியத்தைப் பெற்றுத்தரும். அப்படிப்பட்ட ஆற்றல்மிக்கக் காற்றைப் பிடித்துக் கட்டுகிற பெரிய வேலையை, இனி நாம் கற்றுக் கொள்வோம்.