பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(7. காற்றைப் பிழக்கும் கணக்கு) காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியது வாமே (திருமந்திரம் 553) வெளியிலிருக்கும் காற்றை மூக்கு வழியாக உள்ளே ஏற்றி, பிறகு வெளியே இறக்கும் இரண்டு வேலையைச் செய்து காற்றைப் பிடிப்பதைத்தான் கணக்கு என்றார்கள். அந்த கணக்கை 1 : 4 : 2 என்று கூறுவார்கள் 1.4.2 என்பதற்கான விளக்கம் இதோ. 1. ஒரு மடங்கு என்பது காற்றை மூக்கின் இடது பக்கத்தால் உள்ளிழுத்தல். இடது மூக்கு சுவாசம் என்பது இடகலை. 2 : 2 மடங்கு என்பது இழுத்த காற்றை மூக்கின் வலது பக்கத்தால் வெளிவிடுவது. வலது மூக்கு சுவாசம் என்பது பிங்கலை. 3,4 மடங்கு என்பது காற்றை நுரையீரல்களுக்குள்ளே அடக்கி வைத்திருத்தல், கும்பகம் என்று இதற்கு பெயர். இப்போது மடங்கு என்றால் என்ன? எவ்வளவு என்பதையும் சற்று தெளிவாகக் காண்போம். ஒரு மடங்கு என்பது 16 மாத்திரைகள் 4 மடங்கு என்றால் 64 மாத்திரைகள் 2 மடங்க என்பக 32 மாக்கிாைகள்