பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(முன்னுரை) பேரின்பம் தரும் பிராணாயாமம் என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன். இன்பம் கிடைத்தாலே போதும், இன்பம் எங்கே இருக்கிறது? இன்பம் எங்கே கிடைக்கிறது என்று தேடுபவர்கள், திகைப்பவர்கள், திண்டாடித் தெருவிலே அலைபவர்கள் ஏராளம் ஏராளம். பேசுவதற்குப் பிரியமான வார்த்தை. கிடைப்பதோ குதிரைக் கொம்பான முயற்சி, என்று பேசுவோர் அதிகம். கிடைக்காத வெறுப்பில் ஏசுவோர் அதிகம். இந்தச்சூழ்நிலையில், இன்பம் தருகிற ஒரு நூலை உங்களிடம் தருகிறேன் என்றால், என்ன தைரியம் உங்களுக்கு? என்று பலர் எதிர்ப்புடன் விமர்சிக்கக் கூடும். நான் சொல்ல வந்தது இன்பமில்லை பேரின்பம். அப்படியென்றால், இன்னும் கொஞ்சம் எரிச்சல் அதிகமாக வரும் என்பதும் எனக்குத் தெரியும். இன்பம் என்பதற்குரிய அர்த்தத்தைப் புரிந்து கொண்டால், இன்பம் எங்கே இருக்கிறது? எங்கே கிடைக்கிறது என்ற ரகசியம் புரிந்து விடும். இன்பம் என்பதற்கு அக மகிழ்ச்சி ஆனந்தம் என்ற அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இன்பம் என்றால் காமம், கல்யாணம், சேமம் என்று தான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.