பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போனபம தரும பிராணாயாமம Sl --سے கவனம் வேண்டும் இந்த முறை மாறுபடாமல் செய்திட வேண்டும். இதற்காக ஒரு சமமான நாற்காலியில் அல்லது தரையில் அமர்ந்திருந்து, முதுகு கழுத்து முதலிய உறுப்புகள் எல்லாம் சிறிதும் வளையாமல் நேராக வைத்து, நிற்கும்படி செய்தல் வேண்டும். மூச்சை ஒரு மூக்கால் உள்ளிழுக்கிற சமயத்தில் அல்லது வெளிவிடுகிற நேரத்தில் தலையை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ திருப்பக்கூடாது. திரும்பவும் கூடாது. நேரே பார்த்து தலையை நேராக வைத்திருக்க வேண்டும். இங்கே சொல்லிய முறைபோல ஒரு நாளைக்கு எழுமுறை அதாவது ஏழு சுற்று மூச்சுக்கொள்ளுதல் வேண்டும் என்று மறைமலை அடிகளார் கூறுவார்கள். விடியற்காலையில் உறக்கம் நீங்கி எழுந்தவுடன், நீராடிய பின், மாலை நேரத்தில் செய்யலாம். ஆனால் வயிறு வெறுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் தொடர்ந்து செய்து கொண்டு வந்த பிறகு, மூச்சிழுக்கும் நேரக் கணக்கை அதிகரித்துக் கொள்ளலாம். முதலில் அதிகக் காற்றை உள்ளிழுக்கிறபோது இனம்புரியாத உணர்வு அலைபோன்ற ஒரு நிலை உடலுக்கு ஏற்படும். அதை அனுசரித்து கொஞ்சங் கொஞ்சமாக அனுபவித்து காற்றைப் பிடிக்கும் கணக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும். எச்சரிக்கையும் நிதானமும் இருந்தால் எதையும் வெல்ல முடியும் என்ற கருத்து இதற்கும் பொருந்தும்.